ரூ.80 லட்சம் யாருக்கு கொடுத்தார் என எனக்கு தெரியாது


ரூ.80 லட்சம் யாருக்கு கொடுத்தார் என எனக்கு தெரியாது
x

மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் நந்தீஸ் ரூ.80 லட்சத்தை யாருக்கு கொடுத்தார் என எனக்கு தெரியாது என்று மந்திரி எம்.டி.பி.நாகராஜ் தெரிவித்தார்.

பெங்களூரு:

நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கே.ஆர்.புரம் இன்ஸ்பெக்டர் நந்தீஸ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் கிடையாது. ஆனால் அவர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக எனக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அந்த அளவுக்கு அவருக்கு என்ன அழுத்தம் என்று நான் கேட்டேன். ரூ.80 லட்சம் செலவு செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.

எதற்காக ரூ.80 லட்சம் கொடுத்து அவர் இந்த இடத்திற்கு வந்தார் என்று நான் கேட்டேன். அவர் அந்த தொகையை யாருக்கு கொடுத்தார் என்பது எனக்கு தெரியாது. இறந்துபோன அவருக்கு தான் இதுபற்றி தெரியும். நகர உள்ளாட்சி அமைப்புகளில் விரைவில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும். குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படும். 2-வது கட்ட அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.9 ஆயிரம் கோடிக்கு ஒரு செயல் திட்டத்தை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க விரைவில் ஒரு மின் வாகன கொள்கை வெளியிடப்படும்.

இவ்வாறு எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.


Next Story