'நடிகருடன் டேட்டிங் சென்றபோது கஷ்டங்களை அனுபவித்தேன்'
நடிகருடன் டேட்டிங் சென்றபோது கஷ்டங்களை அனுபவித்தேன் என்று நடிகை ஹன்சிகா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
பெங்களூரு:-
தமிழ், தெலுங்கு, கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பின்னரும் தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு ரசிகர்களை நடிகை ஹன்சிகா மோத்வானி கிரங்கடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் திரைஉலகிற்கு வந்த ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்கள் குறித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறுகையில், 'என் சினிமா வாழ்க்கையில் நான் ஒரு நடிகரால் ஏராளமான கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்தேன். அது நான் சினிமா உலகுக்கு வந்த ஆரம்ப காலக்கட்டம். சினிமா உலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்று வந்த எனக்கு அவ்வளவு கஷ்டங்களை அந்த நடிகர் கொடுத்தார். குறிப்பாக அவருடன் டேட்டிங் சென்றபோது ஏராளமான கஷ்டங்களையும், தொல்லைகளையும் கொடுத்தார். சிலவற்றுக்கு நான் ஒப்புக்கொள்ளாதபோது அவமானப்படுத்தப்பட்டேன். அந்த வலியில் இருந்து நான் மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் அந்த நடிகர் யார் என்று சொல்ல நான் விரும்பவில்லை' என்று கூறினார். நடிகை ஹன்சிகாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.