பதவிக்காக நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது


பதவிக்காக நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது
x

பதவிக்காக நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு:-

குடிநீர் மையம் திறப்பு

சிக்கமகளூரு நகரசபை வளாகத்தில் சுத்தமான குடிநீர் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குடிநீர் மையத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நகரசபையில் தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தமான குடிநீர் மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணிநேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

பதவிக்காக...

பதவிக்காக நான் எப்போதும் ஆசைப்பட்டது கிடையாது. தொடக்கத்தில் நான் மக்களுக்காக நடத்திய போராட்டங்களால் எனக்கு எம்.எல்.ஏ. பதவி கிடைத்தது. அதன்மூலம் மக்களுக்கு சேவையாற்றியதால் மந்திரி பதவியும் தேடி வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கமகளூருவில் இருந்த எம்.எல்.ஏ.க்களை விட நான் அதிகமாக உழைத்துள்ளேன்.

சிக்கமகளூரு நகரின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளேன். பட்ஜெட்டில் சிக்கமகளூருவுக்கு அதிக நிதி பெற்று, அதிகப்படியான வளர்ச்சி பணிகளை செய்து கொடுத்துள்ளேன். நான் செய்த வளர்ச்சி பணிகளால் இந்தப்பகுதி மக்கள் என்னை மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். இது என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை. எப்போதும் அந்த நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பேன்.

தரமான பட்ஜெட்

மத்திய பட்ஜெட், ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. வருமான வரி செலுத்துபவர்களும் பயன் அடைவார்கள். இந்த பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் இருந்தாலும், எதிர்க்க வேண்டும் என்ற காரணத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் குறை கூறி வருகிறார்கள். இது தரமான பட்ஜெட். இதுபோன்ற பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் நிலை தான் இந்தியாவுக்கு வந்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story