உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - குமாரசாமி


உதய்பூர் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - குமாரசாமி
x

சகிப்பின்மை, பகையால் மதத்தை காப்பாற்ற முடியாது என குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தானில் இந்து பிரமுகர் கன்னையா லால் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு கோழைத்தனமான தாக்குதல். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. ஒரு கருத்தை வெளியிட்டதற்காக கொலை செய்வது என்பது கண்டிக்கத்தக்கது. வன்முறை எதற்கும் தீர்வல்ல.

எந்த மதமும் வன்முறையை ஒப்புக்கொள்வது இல்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். மீண்டும் ஒரு முறை இத்தகைய சம்பவம் அரங்கேற கூடாது. பிறரை கொலை செய்து அதன் மூலம் ஒரு மதத்தை காக்க முடியுமா?. கொலை, மதவாதம், சகிப்பின்மை, பகையால் மதங்களை காப்பாற்ற முடியாது.

வன்முறை எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு மதம் அழியும். கொலையான கன்னையா லாலுக்காக நாடே கண்ணீர் விடுகிறது. அவரது ஆத்மா அமைதி பெறட்டும். இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.


Next Story