ஹாசன் தொகுதியில் செல்வாக்கு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்-பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. பேட்டி


ஹாசன் தொகுதியில் செல்வாக்கு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன்-பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஹாசன் தொகுதியில் செல்வாக்கு உள்ளதால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

ஹாசன்:

ஹாசன் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. பிரீத்தம் கவுடா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது வீட்டிலும், கட்சியிலும் எனக்கு அரசியல் கற்று கொடுத்திருக்கிறார்கள். கட்சியில் என்னைவிட வயதில் குறைந்தவர்களை நான் மதிக்கிறேன். அவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சொந்த கட்சியினரையே குடிகாரர், ரவுடிகள் என்று கூறுகின்றனர். மூத்த அரசியல் தவைர்களை ஒருமையில் அழைக்கின்றனர். இது அவர்களுடைய கொள்கை. நான் அப்படி பேசுவது இல்லை. தன்னிடம் உள்ளவர்களை எப்படி அழைக்கவேண்டும் என்று தெரிந்துள்ளேன். ஹாசன் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்.

இது அவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. நான் குடும்ப அரசியல் செய்யவரவில்லை. ஆனால் ஜனதா தளம் (எஸ்) கட்சியில் குடும்ப அரசியல் உள்ளது. ஹாசன் மாவட்டத்தில் அவர்கள் செல்வாக்கு இருக்கலாம். ஆனால் ஹாசன் சட்டசபை தொகுதியில் எனக்குதான் செல்வாக்கு உள்ளது. அதனால் வரும் சட்டசபை தேர்தலில் நான்தான் வெற்றிபெறுவேன். அதற்கு மக்கள் எனக்கு துணையாக இருபார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story