அந்தமான்-நிகோபருக்கு ஐஸ்கிரீம் ஏற்றுமதி செய்யும் கே.எம்.எப்.


அந்தமான்-நிகோபருக்கு  ஐஸ்கிரீம்   ஏற்றுமதி செய்யும் கே.எம்.எப்.
x

அந்தமான்-நிகோபருக்கு கே.எம்.எப். ஐஸ்கிரீம் ஏற்றுமதி செய்கிறது.

பெங்களூரு: கர்நாடக பால் கூட்டமைப்பு(கே.எம்.எப்.) அண்டை மாநிலங்கள், அந்தமான்-நிகோபர் தீவுக்கு பால் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக பால் கூட்டமைப்பு சார்பில் அந்தமான்-நிகோபருக்கு ஐஸ்கிரீம் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கர்நாடக பால் கூட்டமைப்பு அதிகாரிகள் கூறும்போது, கே.எம்.எப். சார்பில் அந்தமான்-நிகோபர் தீவுக்கு கடந்த வாரம் முதல்முறையாக 12 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் ஐஸ்கிரீமை அனுப்பி உள்ளோம். அந்தமான்-நிகோபரில் இருந்து கூடுதலாக ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினர்.


Next Story