சாமி சிலையை தொட்டதற்கு அபராதம் செலுத்தினால் தீட்டு விலகி விடுமா?- காங். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் கேள்வி


சாமி சிலையை தொட்டதற்கு அபராதம் செலுத்தினால் தீட்டு விலகி விடுமா?- காங். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் கேள்வி
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாமி சிலையை தொட்டதற்கு அபராதம் செலுத்தினால் தீட்டு விலகி விடுமா? என்று காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி பிரிவு மாநில தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கோலார் தங்கவயல்:

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி அருகே கொல்லேரஹள்ளி கிராமத்தை சேர்ந்த தலித் சிறுவன், சாமி சிலையை தொட்டதற்காக ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக தலித் சிறுவனின் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினர் நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதேபோல் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் தர்மசேனா, சிறுவனின் வீட்டுக்கு சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் காசோலை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மாரியம்மன் சிலையை தொட்டதால் தீட்டு பட்டுவிட்டதாக கூறி தலித் சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்கப்பட்டால் அதன் மூலம் தீட்டு விலகி விடுமா?. அப்படியானால் சாமி சிலையை தொட்டு வணங்க எங்களுக்கு அனுமதி அளித்தால் எவ்வளவு அபராதத்தையும் செலுத்த தயாராக இருக்கிறோம். இதுபோன்று சாதி பெயரில் அராஜகம் நடத்துவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். தலித் வகுப்பினர் மீது வன்கொடுமை நடத்துவதை காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story