சுதந்திர தின விழாவை புறக்கணித்த தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'


சுதந்திர தின விழாவை புறக்கணித்த  தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்
x

சுதந்திர தின விழாவை புறக்கணித்த தலைமை ஆசிரியை ‘சஸ்பெண்ட்’ ஆகியுள்ளார்.

பெங்களூரு: நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சிங்கேரி கவுடா கிராமத்தில் உள்ள கொப்பலு அரசு பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்படவில்லை. அப்பள்ளியின் தலைமை ஆசிரியை நிர்மலா மேரி பள்ளிக்கு வரவில்லை.

மேலும் பள்ளியும் பூட்டியே கிடந்தது. ஏற்கனவே கல்வித்துறை உத்தரவிட்டும் அதை மீறி சுதந்திர தின விழாவை நிர்மலா மேரி கொண்டாடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி லோகேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் துறைரீதியான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.



Next Story