டெல்லி ஐஐடி மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை


டெல்லி ஐஐடி மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
x

மாணவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆயுஷ் என்ற மாணவர் டெல்லி ஐஐடியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஆயுஷ் நேற்று இரவு வளாகத்தில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

மாணவர் தங்கியிருந்த அறையில் இருந்து இதுவரை எந்த குறிப்பும் மீட்கப்படவில்லை. ஆயுஷின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அதிகாரிகள், அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்.


Next Story