குடியிருப்புகளை முறைகேடாக பயன்படுத்தும் வியாபாரிகள்


குடியிருப்புகளை முறைகேடாக   பயன்படுத்தும் வியாபாரிகள்
x

குடியிருப்புகளை முறைகேடாக வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர்.

பெங்களூரு: வில்சன் கார்டன் பகுதியில் உள்ள குடியிருப்புகளை உரிமையாளர்கள் வாடகைக்கு விட்டுள்ளனர். அரசு உத்தரவுபடி வாடகை விடப்படும் வீடுகளுக்கு தனி வரியும், கடைகளாக பயன்படுத்தும் வீடுகளுக்கு தனி வரியும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வில்சன் கார்டன் பகுதியில் 1 முதல் 15-வது கிராஸ் பகுதியில் சாலையோரம் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளை வாடகைக்கு எடுத்து பலர் பூக்கள் உள்ளிட்ட வியாபார பொருட்களை சேமித்து வைக்கும் குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாடகை, குடிநீர், மின்சாரம் போன்றவற்றுக்கு குறைந்த கட்டணம் என்பதாலும், அதேசமயம் கடைகளுக்கு என்றால் கூடுதல் என்பதால் பலரும் இதுபோன்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வில்சன் கார்டன் குடியிருப்போர் சங்கம், கர்நாடக ஐகோர்ட்டை நாடி உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story