சட்டவிரோதமாக கடத்திய ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்-5 பேர் கைது


சட்டவிரோதமாக கடத்திய ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்-5 பேர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிக்கப்பள்ளாபூரில் சட்டவிரோதமாக கடத்திய ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா போலீசார் கஞ்சேனஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த அந்த வழியாக 3 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் சந்தேகப்படும்படியாக வந்தனர். அவா்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவா்கள் வைத்திருந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அப்போது அதில், செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா ஹலியூர் கிராமத்தை சேர்ந்தவர் லிகித் கவுடா (வயது 35), கிருஷிகா பாஸ்கர் (37), கட்டதநாயகனஹள்ளியை சேர்ந்த நாகேஷ் (30), சிக்பள்ளாப்பூர் தாலுகா ஹொண்டனஹள்ளியை சேர்ந்த பிரவீன் (33), சிட்லகட்டா தாலுகா ஜங்கமனகோட்டையை சேர்ந்த கேசவா (31) என்பதும், அவர்கள் செம்மரக்கட்டைகளை விற்பனைக்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சிட்லகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story