எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையில் முன்னேற்றம் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்


எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையில் முன்னேற்றம்  சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்
x
தினத்தந்தி 27 Sept 2022 11:00 AM IST (Updated: 27 Sept 2022 11:00 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் 3 நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சிகிச்சை

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர காய்ச்சல், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்படும், எஸ்.எம்.கிருஷ்ணா தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறாா்கள்.

இந்த நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவை நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடமும் அவர் கேட்டு அறிந்து கொண்டார். இதுபோல், சுகாதாரத்துறை மந்திரி சுதாகரும் நேற்று காலையில் ஆஸ்பத்திரிக்கு சென்று எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

உடல் நிலையில் முன்னேற்றம்

பின்னர் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், 'முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தேன். அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையை கண்காணிக்க தனியாக டாக்டர்கள் குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவினர் அவருக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

தற்போது எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்று, தொடர்ந்து அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் இன்னும் 3 நாட்களில் தீவிர கண்காணிப்பில் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படலாம்' என்றார்.


Next Story