கர்நாடகத்தில் 13 இடங்களில் வெயில் 'சதம்' அடித்தது; பல்லாரியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது


கர்நாடகத்தில் 13 இடங்களில் வெயில் சதம் அடித்தது; பல்லாரியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 13 இடங்களில் வெயில் ‘சதம்’ அடித்தது. பல்லாரியில் 107 டிகிரி வெயில் சுட்டெரித்தது

பெங்களூரு:

கர்நாடகத்தில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மாநிலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. அவ்வப்போது ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. குறிப்பாக வடகர்நாடக மாவட்டங்களில் வெயில் கோரத்தாண்டவமாடி வருகிறது. நேற்று பெலகாவி, பீதர், விஜயாப்புரா, பாகல்கோட்டை, தார்வார், கதக், கலபுரகி, கொப்பல், ராய்ச்சூர், பல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, பெங்களூரு புறநகர் ஆகிய 13 இடங்களில் வெயில் 'சதம்' அடித்தது. அதிகபட்சமாக பல்லாரியில் 107.42 டிகிரி வெயில் சுட்டெரித்தது. கர்நாடகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் பின்வருமாறு:-

கார்வார் - 98.24 டிகிரி

மங்களூரு - 96.98 டிகிரி

பெலகாவி - 100.04 டிகிரி

பீதர் - 100.4 டிகிரி

விஜயாப்புரா - 105.8 டிகிரி

பாகல்கோட்டை - 100.4 டிகிரி

தார்வார் - 100.76 டிகிரி

கதக் - 102.56 டிகிரி

கலபுரகி - 106.7 டிகிரி

ஹாவேரி - 97.52 டிகிரி

கொப்பல் - 106.7 டிகிரி

ராய்ச்சூர் - 104.36 டிகிரி

பெங்களூரு - 95.72 டிகிரி

பெங்களூரு ஏர்போர்ட்- 96.98 டிகிரி

பெங்களூரு புறநகர்- 102.92 டிகிரி

பல்லாரி - 107.42 டிகிரி

சிக்கமகளூரு - 93.56 டிகிரி

சித்ரதுர்கா - 101.3 டிகிரி

தாவணகெரே - 101.84 டிகிரி

சிந்தாமணி - 97.88 டிகிரி

மண்டியா - 98.6 டிகிரி

மடிகேரி - 86.72 டிகிரி

மைசூரு - 97.52 டிகிரி

சிவமொக்கா - 99.32 டிகிரி


Next Story