காதல் விவகாரத்தில் வாலிபர் மீது தாக்குதல்


காதல் விவகாரத்தில்    வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதல் விவகாரத்தில் வாலிபா் மீது தாக்குதல் நடத்தியவர்களை மாகடிரோடு போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாகடி ரோட்டில் வசித்து வருபவர் மஞ்சேஷ். இவர் ஒரு இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார். ஆனால் அந்த இளம்பெண் நிதின் (வயது 26) என்ற வாலிபரை காதலித்து வந்து உள்ளார். இதுபற்றி அறிந்ததும் மஞ்சேஷ் கடும் கோபம் அடைந்தார். இந்த நிலையில் நிதினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மஞ்சேஷ் காதல் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று அழைத்து உள்ளார். அதன்படி மாகடி ரோட்டில் உள்ள ஒரு மதுபான விடுதியின் முன்பு நிதின் வந்தார். அப்போது நிதினை மஞ்சேசும், அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த நிதின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதுல் சம்பவம் குறித்த புகாரின்பேரில் மாகடி ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சேசையும், அவரது நண்பர்களையும் தேடிவருகின்றனர்.


Next Story