பெங்களூருவில், 38 ஆண்டுக்கு பின்பு யசருகட்டா ஏரி நிரம்ப வாய்ப்பு
பெங்களூருவில், 38 ஆண்டுக்கு பின்பு யசருகட்டா ஏரி நிரம்ப வாய்ப்பு உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பெங்களூருவில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் மிகப்பெரிய ஏரியாக இருக்கும் யசருகட்டா ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. யசருகட்டா ஏரி 1,110 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. அந்த ஏரி 72 அடி ஆழம் கொண்டதாகும். அந்த ஏரி கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சி அளித்தது. அதன்பிறகு, அநத ஏரி நிரம்பவில்லை.
இந்த நிலையில், பெங்களூருவில் சமீபமாக பெய்து வரும் மழை காரணமாக யசருகட்டா ஏரி 69 அடி வரை நிரம்பி இருக்கிறது. ஏரி முழுவதுமாக நிரம்ப இன்னும் 3 அடிகளே பாக்கி உள்ளது. இந்த மாத இறுதியில் ஏரி முழுவதுமாக நிரம்ப வாய்ப்புள்ளது. ஏரியில் 69 அடிக்கு தண்ணீர் நிரம்பி இருப்பதால், கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் அழகை காண தினமும் ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.