சிக்கமகளூருவில் சாலை பள்ளங்களை மூடிய போலீஸ்காரர்கள்; பாராட்டுகள் குவிகிறது
சிக்கமகளூருவில் சாலை பள்ளங்களை மூடிய போலீஸ்காரர்களுக்கு பாராட்டுகள் குவித்து வருகிறது.
சிக்கமகளூரு;
சிக்கமகளூருவில் இருந்து ஆல்தூர் செல்லும் சாலை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் சேதம் அடைந்தது. அந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது. அந்த சாலையில் பல இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிைல ஏற்பட்டது. இதுகுறித்து ஆல்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய நாராயணனின் கவனத்திற்கு வந்தது. அவர் 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரா்கள் உதவியுடன் அந்த சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை மணல் கொண்டு நிரப்பி மூடினார்.
மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார். போலீஸ்காரா்களின் இந்த செயலை அப்பகுதியினர் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.