சிக்கமகளூருவில் காபி தோட்ட உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்


சிக்கமகளூருவில்  காபி தோட்ட உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூருவில் காபி தோட்ட உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

சிக்கமகளூரு,ஜூலை.26-

சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காபிதோட்ட உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாத் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட காபி தோட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி அளிக்கையில், காபி தோட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் போது ஆதார் கார்டு கட்டாயம் வாங்க வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குகள் ஏதும் உள்ளதா? என்பதை தோட்ட உரிமையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து காபி தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் நபரை கண்காணிக்க வேண்டும். மேலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்பதை காபி தோட்ட உரிமையாளர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டே ஒருசிலர் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை கண்காணிக்க போலீசார் காபி தோட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வடமாநில தொழிலாளர்கள் மீது சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் உடனே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காபி தோட்டத்தில் தங்கி வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் கடந்த சில நாட்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் காபி தோட்ட தொழிலாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாத் கூறினார்.


Next Story