தட்சிண கன்னடாவில் மிளகு விலை ரூ.600 தாண்டியது


தட்சிண கன்னடாவில்  மிளகு விலை ரூ.600 தாண்டியது
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடாவில் மிளகு விலை ரூ.6௦௦-யை தாண்டி உள்ளது.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் அதிக அளவில் விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறது மிளகு விலை 600 ரூபாயை தாண்டி உள்ளது. 2015-16-ம் ஆண்டில் மிளகு விலை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.675-700 ஆக இருந்தது.

பின்னர் ஒரு கிலோ மிளகு ரூ.300 ஆக குறைந்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக மிளகு விலை ரூ.500-ஐ தாண்டவில்லை. இந்தநிலையில் மிளகின் தேவை அதிகரிப்பால் இந்த ஆண்டின் அதிகபட்சமாக விலை உயர்ந்துள்ளது. புத்தூர் மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகு ரூ.590-605-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இதனால் மிளகு விலை ரூ.600-ஐ தாண்டி உள்ளது. மேலும் மிளகு விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



Next Story