இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு


இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2022 10:29 AM IST (Updated: 8 Aug 2022 10:30 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 16,167 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம்19,406, நேற்று 18,738 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,167ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44,161,899 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,549 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,35,510-ஆக உள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,34,99,659 ஆக உயர்ந்துள்ளது.


Next Story