கர்நாடகத்தில், அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்வு


கர்நாடகத்தில், அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்வு
x

கர்நாடகத்தில், அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசு தொல்லியல் துறை உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பள விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. அதாவது 10 முதல் 15 சதவீதம் வரை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத்தில் பணியாற்றும் உதவி பொறுப்பாளர்கள், உதவியாளர்களின் சம்பள விகிதம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஆசிரமம் பள்ளி ஆசிரியர்கள், கலால்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறையில் வன காவலர்கள், துணை வன அதிகாரிகள், யானைகளை பராமரிப்பவர்கள், போலீஸ் தடய அறிவியல் ஆயவகத்தில் பணியாற்றும் உதவியாளர்கள், தொழிலாளர் நலத்துறையில் தொழிலாளர் நல அதிகாரிகள், சட்ட அளவியல் அதிகாரிகள், அச்சக-எழுதுபொருள் துறையில் உதவி இயக்குனர்கள், சமூக நலத்துறையில் ஆசிரமம் பள்ளி ஆசிரியர்கள், நில அளவீடு மற்றும் ஆவண துறையில் உதவி இயக்குனர்களின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


Next Story