கர்நாடகத்தில், கடந்த 3 ஆண்டுகளில் கோவில்களில் திருடிய 356 பேர் கைது
கர்நாடகத்தில், கடந்த 3 ஆண்டுகளில் கோவில்களில் திருடிய 356 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு: கர்நாடக குற்றம் மற்றும் தொழில்நுட்ப சேவை கூடுதல் டி.ஜி.பி. ஜிதேந்திரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை கோவில்களில் நடந்த திருட்டு தொடர்பாக 1,529 வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த திருட்டு தொடர்பாக 3 ஆண்டுகளில் 356 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2019-ம் ஆண்டு 100 பேரும், 2020-ம் ஆண்டு 99 பேரும், 2021-ம் ஆண்டு 117 பேரும், 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 45 பேரும் கைதாகி உள்ளனர். அதிகபட்சமாக துமகூருவில் 39 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு நகரில் 32 பேரும், உத்தர கன்னடாவில் 29 பேரும், ஹாசனில் 26 பேரும் கைதாகி உள்ளனர். மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story