கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது


கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது
x

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

பெங்களூரு:

கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 16 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,019 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 655 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாரி, பெங்களூரு நகர், தார்வாரில் தலா ஒருவர் இறந்தனர். 27 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. நேற்று 1,662 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 39 லட்சத்து 69 ஆயிரத்து 691 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 11 ஆயிரத்து 252 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 6.17 சதவீதமாக உள்ளது.

மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 2 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்று சற்று குறைந்து இருப்பது சுகாதாரத்துறையை நிம்மதி அடைய செய்து உள்ளது.


Next Story