கட்டைபாகிலு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
கட்டைபாகிலு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகா குருவே கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயப்பா (வயது 52). விவசாயியான இவர் கட்டைபாகிலு என்னும் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் எதிர்திசையில் மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆஞ்சநேயப்பா மீது பயங்கரமாக மோதி உள்ளது. இதில் அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி ெகாண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ஆஞ்சநேயப்பாவை மீட்டு சிருங்கேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பாிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சிருங்ேகரி போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.