குடகில் யானை பற்கள் விற்க முயன்ற 2 பேர் கைது


குடகில் யானை பற்கள் விற்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடகில் யானை பற்கள் விற்க முயன்ற 2 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

குடகு;

குடகு மாவட்டம் மடிகேரி வனப்பகுதியில் இருந்து யானை பற்களை கடத்தி வந்து ஒசகெரே கிராமத்தில் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2 பேர் சாலையோரம் சாக்குபையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 3 யானை பற்கள் இருந்தது.

அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், யானை பற்களை விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த யானை பற்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story