மங்களூருவில் சரக்கு ரெயில் மோதி 20 எருமை மாடுகள் செத்தன
மங்களூருவில் சரக்கு ரெயில் மோதி 20 எருமை மாடுகள் செத்தன.
மங்களூரு-
மங்களூருவில் சரக்கு ரெயில் மோதி 20 எருமை மாடுகள் செத்தன.
சரக்கு ரெயில் மோதியது
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நேற்று முன்தினம் இரவு கங்கனாடி ரெயில் நிலையத்தில் இருந்து மங்களூரு கெமிக்கல் நிறுவனம் (எம்.சி.எப்.) நோக்கி சரக்கு ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் ஜோகட்டே அருகே அங்காரகுந்தி பகுதியில் சென்றபோது, ரெயில் தண்டவாளத்தில் 20-க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் நின்றதாக தெரிகிறது.
சரக்கு ரெயில் வருவதை அறிந்ததும் எருமை மாடுகள் அங்கிருந்து செல்ல முயன்றன. ஆனாலும் அதற்குள் சரக்கு ரெயில், தண்டவாளத்தில் நின்ற எருமை மாடுகள் மீது மோதியது.
20 எருமை மாடுகள் செத்தன
இதில் ரெயில் தண்டவாளத்துக்கு அருகில் இருந்த பள்ளத்தில் எருமை மாடுகள் தூக்கி வீசப்பட்டன. இந்த விபத்தில், 20 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கத்ரி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், ரெயில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 எருமை மாடுகளை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த 20 எருமை மாடுகளின் உடல்களையும் அதேப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், ரெயில் மோதியதில் எருமை மாடுகள் பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.