மங்களூருவில் கல்லூரி மாணவர்களை தாக்கிய 7 பேர் கைது
மங்களூருவில் கல்லூரி மாணவர்களை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
கேரள மாநிலம் செர்கலா பகுதியை சேர்ந்த ஜாபர் ஷெரீப், மஞ்சேஷ்வர் பகுதியை சேர்ந்த முஜீப், ஆஷிக். இவர்கள் 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவர். இவர்கள் தன்னுடன் படிக்கும் மாணவிகளுடன் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள சோமேஷ்வர் கடற்கரையில் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேரையும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து உல்லால் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர். அதன் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பின் இச்சம்பவம் தொடர்பாக பஸ்திபடப்பு பகுதியைச் சேர்ந்த யதீஷ், தாளப்பாடியைச் சேர்ந்த சச்சின், சுஹேன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story