மங்களூருவில் குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
மங்களூருவில் குற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யபட்டார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உருவா போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜெ.எம்.ரோடு பகுதியை சேர்ந்தவர் அமீர் சுகைல் (வயது 27). இவரை குற்ற வழக்கு ஒன்றில் உருவா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், அதன்பிறகு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து உருவா போலீசார் அவரை தேடி வந்தனர். மேலும், மங்களூரு கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இந்த நிலையில் அமீர் சுகைல், உருவா பகுதியில் பதுங்கி இருப்பது பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று பதுங்கி இருந்த அமீர் சுகைலை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story