பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூருவில். விவசாய சங்கம் சார்பில் போராட்டம்

பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூருவில். விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடக்க உள்ளது.
மைசூரு: சர்வதேச யோகா தினவிழா வருகிற 21-ந்தேதி கொண்டாடப்படுகிறது. மைசூரு அரண்மனையில் அன்று நடக்கும் யோகா தினவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகையையொட்டி அன்றைய தினம் மைசூருவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக கரும்பு விவசாய சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மைசூருவில் கரும்பு விவசாய சங்கத்தலைவர் குருபூர் சாந்தக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சர்வதேச யோகா தினவிழாவில் கலந்துகொள்ள மைசூருவுக்கு பிரதமர் மோடி வருகிறார். அப்போது விவசாயிகளின் கஷ்டங்களை பிரதமர் மோடிக்கு வெளிப்படுத்த விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. மைசூரு கோர்ட்டு எதிரே இருக்கும் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள், கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். இதற்கு அனைத்து விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.