தாவணகெரேவில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.39½ லட்சம் பறிமுதல்


தாவணகெரேவில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.39½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரேவில் ஏ.டி.எம். மையத்திற்கு கொண்டு சென்ற ரூ.39½ லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிக்கமகளூரு-

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10-ந் நடைபெறுகிறது. இதையொட்டி கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுக்க மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் தாவணகெரே டவுன் பகுதி ஆஜாத் நகரில் உள்ள சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி சவுமியா தலைமையில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.39½ லட்சம் இருந்தது. அந்த வேன் இந்தியா நம்பர் ஒன் தனியார் ஏ.டி.எம். நிறுவனத்திற்கு சொந்தமானதும், ஏ.டி.எம். மையத்திற்கு பணம் நிரப்ப செல்வதும் தெரியவந்தது.

இதுதொடர்பான ஆவணங்கள் வேனில் இருந்தவரிடம் இருந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைபடி வங்கிகளில் இருந்து ஏ.டி.எம். மையத்திற்கு ரூ.10 லட்சம் வரை மட்டுமே எடுத்து செல்ல அனுமதி உள்ளது. இதனால் பறக்கும் படையினர் ரூ.39½ லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல சிக்கமகளூரு மாவட்டம் கடூர் அக்சராநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் பறக்கும் படையினர் காரை சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் இருந்தது. இதையடு்த்து பறக்கும் படையினர் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story