கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஒதுக்கி வைத்த வழக்கில்மேலும் 8 பேர் கைது
கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஒதுக்கி வைத்த வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் செய்துள்ளனர்.
கொள்ளேகால்-
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஹுனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கலப்பு திருமணத்துக்கு கிராமத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களை கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து கோவிந்தராஜ், மாம்பள்ளி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்திருந்தனர். இந்த நிலையில், கலப்பு திருமணம் செய்த தம்பதியை கிராமத்தைவிட்டு ஒதுக்கி வைத்த வழக்கில் மேலும் 8 பேரை மாம்பள்ளி போலீசார் ைது செய்துள்ளனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.