மனைவியை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை


மனைவியை கொலை செய்த வழக்கில்  விவசாயிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மனைவியை கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தாவணகெரே மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

சிக்கமகளூரு:

குத்தகை பணம்

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தாலுகா கொன்னாடலே கிராமத்தை சேர்ந்தவர் தத்தாத்ரேயா சித்தப்பா. இவரது மனைவி கமலாம்மா. இவர்களுக்கு அந்த பகுதியில் சொந்தமாக விளைநிலம் உள்ளது. அந்த நிலத்தை அவர்கள் குத்தகைக்கு விடுத்திருந்தனர். அதற்கான பணத்தை கமலாம்மா வாங்கி வந்துள்ளார். இந்த பணம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி மீண்டும் அவர்களுக்குள் குத்தகை பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த சண்டை சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தத்தாத்ரேயா, தனது மனைவி என்றும் பாராமல் கமலாம்மாவை அங்கிருந்த உருட்டு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

கைது

இதில் படுகாயம் அடைந்த கமலாம்மா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தத்தாத்ரேயாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தத்தாத்ரேயா ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு தாவணகெரே மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

6 ஆண்டு சிறை

மேலும் வழக்கு குறித்து போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை ேநற்றுமுன்தினம் முடிவடைந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரவீன்குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் தத்தாத்ரேயா மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story