முருக மடாதிபதி மீதான பாலியல் வழக்கில் சிறுமிகள் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம்


முருக மடாதிபதி மீதான பாலியல் வழக்கில்  சிறுமிகள் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம்
x

முருக மடாதிபதி மீதான பாலியல் வழக்கில் சிறுமிகள் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு: முருக மடாதிபதி மீதான பாலியல் வழக்கில் சிறுமிகள் தாக்கல் செய்த மனு குறித்து விளக்கம் அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மடாதிபதி கைது

சித்ரதுர்கா மாவட்டம் முருக மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவமூர்த்தி முருகா சரணரு, இவர் மடத்திற்கு சொந்தமான பள்ளியில் படித்து வந்த 2 சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மடாதிபதியை கைது செய்தனர்.

இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மடாதிபதி சார்பில் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

கால அவகாசம்

இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்காலத்து மனு சட்டபூர்வமானது தானா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி சீனிவாஸ் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்காலத்து மனுவுக்கு விளக்கம் அளிக்க ஒரு வார காலம் அவகாசம் கொடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story