பா.ஜனதா பெயரில் பணம் வசூலிக்க தடை
பா.ஜனதா பெயரில் பணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் மர்மநபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பா.ஜனதா தொண்டர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். கொலையான பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு மாநில அரசு மற்றும் பா.ஜனதா கட்சி சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக கட்சி நிற்கிறது. அதனால் பிரவீன் நெட்டார் குடும்பத்திற்கு உதவி செய்வதாக சிலர் பா.ஜனதா பெயரில் பணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. கட்சி பெயரில் அவ்வாறு பணம் வசூலிக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story