உடுப்பியில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
உடுப்பியில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவளது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு-
உடுப்பியில் 7-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவளது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7-ம் வகுப்பு மாணவி
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா பில்லாடி அருகே பன்னெரலாகட்டே கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மகள் பிரியா (வயது 13). இவள் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பிரியா, வீட்டில் சோர்வாக இருந்து வந்தாள். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இதனால் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
தற்கொலை
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். இதற்கிடையே வெளியே சென்றிருந்த கிருஷ்ணா மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது பிரியா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.