விராஜ்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


விராஜ்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விராஜ்பேட்டையில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.காரணம் என்ன? என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடகு-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில தினங்களாக சோகமாக இருந்தார். யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்ஷிதா, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரத்தில் அவரது பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது தீக்ஷிதா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தீக்ஷிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் விராஜ்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தீக்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீக்ஷிதாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story