புதிய பால் கூட்டுறவு மையம் திறப்பு
ஹலகூரில் புதிய பால் கூட்டுறவு மையம் திறக்கப்பட்டது.
மண்டியா:-
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூரை அடுத்த வட்டாரதொட்டி கிராமத்தில் புதிதாக பால் கூட்டுறவு மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கர்நாடக பால் கூட்டுறவு சங்க கூட்டமைப்பின் தலைவர் வி.எம்.விஸ்வநாத் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹலகூரில் புதிய பால் கூட்டுறவு மையம் திறக்கப்பட்டது.ஹலகூரை அடுத்த வட்டாரதொட்டி கிராமத்தில் இது முதல் பால் கூட்டுறவு மையம். இதற்கு முன்னதாக 148-வது பால் கூட்டுறவு மையம் திறக்கப்பட்டது. இந்த புதிய பால் கூட்டுறவு மையம் விவசாயிகளுக்கு பெரிதும் அனுகூலமாக இருக்கும். இதற்கு முன்பு பக்கத்து கிராமத்திற்கு சென்று பால் வழங்கி வந்தீர்கள். இனி அந்த தொந்தரவு இல்லை. இந்த பால் கூட்டுறவு மையத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கூடுதல் பால் உற்பத்தி செய்து வழங்கவேண்டும். அப்போதுதான் அரசுக்கும், விவசாயிக்கும் லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.