வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை: டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்
குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். டெல்லியில் சில ஆண்டுகளில் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம்.
இதுபோன்று குஜராத் இளைஞர்களுக்கும் வேலை வழங்குவோம். அது நடக்கும் வரை, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story