வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: 'டோலோ 650' மாத்திரை நிறுவனத்தில் வருமானவரி சோதனை


வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: டோலோ 650 மாத்திரை நிறுவனத்தில் வருமானவரி சோதனை
x

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: ‘டோலோ 650’ மாத்திரை நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடந்தது.

பெங்களூரு: காய்ச்சலுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்படும் "டோலோ 650" என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் வரி ஏய்ப்பு புகாரின்பேரில் பெங்களூருவில் உள்ள 'டோலோ 650' மாத்திரை தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அதாவது பெங்களூரு ரேஸ்கோர்ஸ் ரோடு மாதவநகரில் உள்ள மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேற்று காலை சென்ற 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தியது.

இந்த சோதனையின் போது அந்த நிறுவனத்தில் இருந்து சில முக்கிய ஆவணங்கள், வருமான வரித்துறையினருக்கு சிக்கியதாகவும், அதனை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாடு, மும்பை, டெல்லி, சிக்கிம், கோவா உள்பட நாடு முழுவதும் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அதன் அதிகாரிகளின் வீடுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


Next Story