வருமான வரி செலுத்துவோருக்கு மின்னணு மேல்முறையீடு திட்டம் அறிவிப்பு


வருமான வரி செலுத்துவோருக்கு மின்னணு மேல்முறையீடு திட்டம் அறிவிப்பு
x

கோப்புப்படம்

வருமான வரி செலுத்துவோருக்கு மின்னணு மேல்முறையீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வருமான வரி செலுத்துவோருக்கான மின்னணு மேல்முறையீட்டு திட்டத்தை (இ-அப்பீல்) வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையின் வரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து, வரி செலுத்துவோர் மேல்முறையீடு செய்யலாம்.

அவற்றை இணை ஆணையர் (மேல்முறையீடு) விசாரித்து முடித்து வைப்பார். காணொலி காட்சி மூலம் தனிப்பட்ட விசாரணைக்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது, மிகவும் திறமையான வரி திட்டத்தை நோக்கிய முற்போக்கு நடவடிக்கை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


Next Story