தெலுங்கானாவில் பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை


தெலுங்கானாவில் பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரிப்பு; சுகாதார நிபுணர் எச்சரிக்கை
x

தெலுங்கானாவில் பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரித்து உள்ளது என சுகாதார நிபுணர் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.



ஐதராபாத்,



தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவுக்கான கண்காணிப்பாளரான மருத்துவர் கே. சங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த வாரத்தில், தெலுங்கானாவில் பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது என கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, டெங்கு பாதிப்புகள் மாநிலத்தில் அதிகரித்து உள்ளன. பன்றி காய்ச்சல் பாதிப்புகளும் அதிக அளவில் பதிவாகின. எனினும், டெங்கு மற்றும் டைபாய்டு பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றன என எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜூலையில் சுகாதார மந்திரி ஹரீஷ் ராவ் விடுத்த எச்சரிக்கை செய்தியில், கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பருவகால நோய்களின் பாதிப்பு அதிகரிக்க கூடிய சூழல் உள்ளது. அதனால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என கூறினார்.

இந்நிலையில் நோய் அதிகரிப்பை முன்னிட்டு, நோய் கண்டறியும் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் உடனுக்குடன் முடிவுகளை அறிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றும் மந்திரி தெரிவித்து உள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார வசதிகளை மேற்கொள்வது, புதிய சரிவிகித உணவு வழங்குவது ஆகியவற்றை உறுதிப்படுத்தும்படியும் மந்திரி கேட்டு கொண்டுள்ளார். இதற்காக வாரியங்களையும் அமைக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


Next Story