கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி- பசவராஜ்பொம்மை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்


கொரோனாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு  லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி-  பசவராஜ்பொம்மை நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்
x

மணலில் டாக்டர் ராஜ்குமார், அவரது மகன் புனித் ராஜ்குமார் ஆகியோரின் உருவம் வடிவமைக்கும் பணி நடப்பதை படத்தில் பார்க்கலாம்.

ெகாேரானாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) ெதாடங்குகிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:ெகாேரானாவால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ெதாடங்குகிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மலர் கண்காட்சி

தோட்டக்கலைத்துறை சார்பில் பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தினால் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 212-வது மலர் கண்காட்சியை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த மலர் கண்காட்சி தொடக்க விழா 5-ந் தேதி (நாளை மறுநாள்) லால்பாக்கில் நடக்கிறது. இதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் இந்த முறை மறைந்த நடிகர்கள் டாக்டர் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரை மையப்படுத்தி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமாரின் சிலைகள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ராஜ்குமாரின் வாழ்க்கை

மேலும் ராஜ்குமார் வாழ்ந்த வீடு அப்படியே தத்ரூபமாக மலர்களால் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு 3.25 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ்குமாரின் வாழ்க்கை குறித்த விஷயங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் இந்த கண்காட்சியில் ராஜ்குமாரின் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். மைசூருவில் புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா பள்ளி மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் 6 லட்சத்து 22 ஆயிரம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த கண்காட்சியில் மொத்தமாக 12.52 லட்சம் ரோஜா மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மணல் சிற்பமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மலர் கண்காட்சியில் கண்ணாடி மாளிகையில் 3½ லட்சம் மலர்களால் ராஜ்குமார் வீடு உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஊட்டியில் இருக்கும் 2,500 பூச்செண்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆலந்து, அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்பட 10 நாடுகளில் இருந்தும் வெளிநாட்டு மலர்கள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. 27 வகையான சிறப்பு மலர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

நுழைவு கட்டணம்

மலர் கண்காட்சியில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மலர் கண்காட்சியை காண நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.75-ம், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். பள்ளி சீருடை அணிந்து கண்காட்சிக்கு வரும் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு ரூ.2.30 கோடி செலவாகியுள்ளது. சுமார் 15 லட்சம் பார்வையாளர்கள் கண்காட்சியை பார்க்க வருவர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு முனிரத்னா கூறினார்.


Next Story