இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது சரியத்தொடங்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனமும் தொற்று பாதிப்பு அவசர நிலையை திரும்ப பெற்றுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா தீவிரம் குறையத்தொடங்கியிருப்பதால் உலக சுகாதார அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- இந்தியாவில் மேலும் 1,839- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 25,178- ஆக குறைந்துள்ளது.நேற்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27,212- ஆக இருந்து. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.49 கோடியாக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story