இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 994- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்தது மக்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. நேற்றும் நேற்று முன் தினமும் ஒருநாள் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டி பதிவாகியிருந்தது. கடந்த 6 மாதங்களில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவாகத்தான் இருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்தது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 994- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,354 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 876 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.