இந்தியா கூட்டணி... வெற்றி கூட்டணி - உத்தவ் தாக்கரே


இந்தியா கூட்டணி... வெற்றி கூட்டணி - உத்தவ் தாக்கரே
x

நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் அனைவரும் இந்திய குடும்பம் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மும்பை,

பா.ஜனதா அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மாதம் நடந்த 2-வது கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிடப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"இந்தியா கூட்டணியை பார்த்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நடுக்கம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணி.. வெற்றி கூட்டணி. நாங்கள் தனிப்பட்ட கூட்டணி அல்ல, நாங்கள் அனைவரும் இந்திய குடும்பம். எங்களின் அனைவருக்கும் ஒன்றுதான் நோக்கம். நாளுக்கு நாள் இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருகிறது. சிலிண்டர் விலை குறைப்பு தேர்தலை மனதில் வைத்து மேற்கொள்ளப்பட்டது" என்று கூறினார்.


Next Story