இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
x

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரேனா பாதிப்பு நேற்று 134 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று 145 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 81 ஆயிரத்து 650 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 161 பேர் உள்பட இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 48 ஆயிரத்து 976 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 1,946 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 16 குறைவு ஆகும். தொடர்ந்து 2-வது நாளாக, புதிதாக உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,728 ஆக நீடிக்கிறது.


Next Story