குழந்தைகள் இறப்பைக் குறைப்பதில் இந்தியா சாதனை - மந்திரி மன்சுக் மாண்டவியா


குழந்தைகள் இறப்பைக் குறைப்பதில் இந்தியா சாதனை - மந்திரி மன்சுக் மாண்டவியா
x
தினத்தந்தி 24 Sept 2022 7:13 AM IST (Updated: 24 Sept 2022 7:25 AM IST)
t-max-icont-min-icon

இந்திய மாதிரி பதிவு அமைப்பு குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து புள்ளி விவர அறிக்கை வெளியிட்டது.

புதுடெல்லி:

இந்திய மாதிரி பதிவு அமைப்பு குழந்தைகள் இறப்பு விகிதம் குறித்து புள்ளி விவர அறிக்கை நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) வெளியிட்டது. குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா ஒரு முக்கிய சாதனையைப் படைத்துள்ளது.

பாலின வேறுபாடு இல்லை

2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் இறப்பு விகிதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.

இந்திய மாதிரி பதிவு 2020-ன்படி, குழந்தை இறப்பு விகிதமானது 2019-ல் 30 ஆக இருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 2 புள்ளிகள் சரிந்து 28 ஆக பதிவாகியுள்ளது. மேலும் கிராமப்புற-நகர்புற குழந்தை இறப்பு வேறுபாடு 12 புள்ளிகளாக குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பாலின வேறுபாடு இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2-ம் இடம்

இந்த அறிக்கையின் படி பிறந்த குழந்தை இறப்பு விகிதத்தில் நிலையான வளர்ச்சி கொள்கை (2030 க்குள் 12-க்கும் குறைவு) இலக்கை கேரளா, டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தற்போதே எட்டிவிட்டன.

மேலும் 5 வயதிற்க்குட்பட்ட குழந்தை இறப்பு விகிதத்தின் நிலையான வளர்ச்சி கொள்கை (2030 க்குள் 24-க்கும் குறைவு) இலக்கை கேரளா, தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்க்கள் எட்டி விட்டன.

மந்திரி மாண்டவியா பாராட்டு

இந்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி டாக்டர். மன்சுக் மாண்டவியா, பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் குழந்தை இறப்பை குறைப்பதற்கு அயராது உழைத்த அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

"இந்திய மாதிரி பதிவு 2020 அறிக்கையின்படி, குழந்தை இறப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், சிறந்த தலைமையின்கீழ், மத்திய - மாநில அரசுகளின் சிறந்த நட்புறவு மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக 2030-க்குள் குழந்தை இறப்பை குறைப்பதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்ட இந்தியா தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


Next Story