உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை - இந்தியா முன்னேற்றம்


உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை - இந்தியா முன்னேற்றம்
x

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை பட்டியலை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விமான பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா 48-வது இடத்தில் உள்ளது. முன்னதாக, இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் இருந்தது.

உலகளாவிய விமான போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் 2-வது இடத்திலும், தென் கொரியா 3-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக 49-வது இடத்தில் சீனா உள்ளது.

இது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி தெரிவிக்கையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றோம். தற்போது பெற்றிருக்கும் இந்த புதிய நிலையை தக்கவைத்துக்கொள்வதில் சவால் உள்ளது.

விமான போக்குவரத்து இயக்குனரகம் திறமையான அதிகாரிகளை கொண்டுள்ளது. எங்களுக்கு சரியான ஆதரவை வழங்கினால், நாங்கள் மேலும் மேம்படுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம். தரவரிசை பட்டியலில் 102-வது இடத்தில் இருந்து 48-வது இடத்திற்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story