தினசரி கொரோனா பாதிப்பு 12,751 ஆக குறைந்தது
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 751 ஆக குறைந்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சில நாட்களாக உயர்ந்து வந்த தினசரி பாதிப்பு இன்று 4-வது நாளாக குறைந்தது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், இது 12 ஆயிரத்து 751 ஆக குறைந்தது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 74 ஆயிரத்து 650 ஆக அதிகரித்தது.
கொரோனாவில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 412 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 4 கோடியே 35 லட்சத்து 16 ஆயிரத்து 71 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 807 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவுக்கு நேற்று 41 பேர் பலியாகி இருந்தனர். இன்று பலி எண்ணிக்கை 41 ஆக சற்று அதிகரித்தது. இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 26 ஆயிரத்து 772 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,06,88,49,775 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,95,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.