இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
x

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் (22-ந் தேதி) 12 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 13 ஆயிரத்து 313 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஒருநள் பாதிப்பு 17,366- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 88,284- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரு நாளில் 13 ஆயிரத்து 029 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் இன்று 13 பேர் உயிரிழந்தனர்.


Next Story