இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,430- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 618- ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 26,618- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,378- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,70,935- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றைக் கண்டறிய ஒரே நாளில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 707 மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story